தொரப்பாடி மலை

அமைவிடம் - தொரப்பாடி மலை
ஊர் - தொரப்பாடி
வட்டம் - செங்கம்
மாவட்டம் - திருவண்ணாமலை
வகை - கல்வட்டம்
கிடைத்த தொல்பொருட்கள் - கல்வட்டம்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

ஒரு பெரிய குழியை தோண்டி, நான்கு பலகைக் கற்களை கொண்டு ஒன்றுடன் ஒன்றாக இணைத்து சதுர வடிவில் நிலை நிறுத்தி கல்லறை உருவாக்கப்படுகிறது. அதன் கீழ் பகுதி மற்றும் மேல் பகுதியில் பெரிய பலகை கல்லை கொண்டு மூடுகின்றனர். பின்னர் குழி மீது சிறிய கற்கள் அல்லது கூழாங்கற்கள் கொட்டப்படு கின்றன. அதன்பிறகு, உருண்டை வடிவில் உள்ள பெரிய கற்களை கொண்டு வட்டமாக அடுக்கி வைத்து ‘கல் வட்டம்’ உருவாக்கப்படுகிறது. தென்பெண்ணை ஆறு மற்றும் செய்யாறு வழித்தடத்தைச் சுற்றி உள்ள பகுதிகளில் கல்வட்டங்களை அதிகளவில் காணமுடிகிறது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் தொரப்பாடி மலை அருகே சுமார் 50-க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் உள்ளன. சில கல்வட்டங்களில் உள்ள கற்கள் சிதையாமலும், சில சிதைக்கப்பட்ட நிலையிலும் உள்ளன. 21 மீட்டர் சுற்றளவும், 6 மீட்டர் அகலமும் மற்றும் 10 மீட்டர் சுற்றளவும், 3 மீட்டர் அகலமும் என்று இருவேறு கல்வட்ட அளவுகளில் இங்கு கல்வட்டங்களை காணமுடிகிறது.

ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

தென்பெண்ணையாறு மற்றும் செய்யாறு வழித்தடங்களில் அமைந்துள்ள குறிப்பிடத்தக்க பெருங்கற்கால ஈமச்சின்னங்களுள் தொரப்பாடி மலையில் அமைந்துள்ள கல்வட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. இங்கு காணப்படும் 50-க்கும் மேற்பட்ட கல்வட்டங்களில் சிதைவுறாதவை ஆராயத்தக்கன.